இமாச்சல் பிரதேசத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல் பிரதேசம் சிம்லா அருகே குட்டுவிலிருந்து டியூனீ செல்லும் வழியில் ஸ்னைல்  ஜீப் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ளவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.