சென்னை:
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.மதிப்பெண் சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாணவி ராஜேஸ்வரி,உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆனால் இரண்டாம் ஆண்டு படிப்புக்கான தனது தேர்வு
முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, சான்றிதழ்களை வழங்கவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தேர்வுத்துறை இயக்குநருக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 2010ல் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, அரசு தேர்வுத்துறை இயக்குநர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்
பட்டது. இதை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததுடன், அரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு அபராதம் விதித்தார்

Leave A Reply

%d bloggers like this: