தில்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரச பரிந்துரை செய்ததால் வேறுவழியில்லாமல் அந்நிறுவனத்தை தேர்ந்தெடுக்கப்பட்டதாக முன்னாள் பிரெஞ்சு அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்ட் தெரிவித்தார்.

ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக எவியேஷன் நிறுவனமும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் தாமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகவும் இதில் இந்திய அரசு தலையீடு எதுவும் இல்லை என்றும் பாஜக சார்பில் அருண் ஜேட்லியும், நிர்மலா சீதாராமனும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முன்னாள் பிரெஞ்சு அதிபர் பிரிரான்கோய்ஸ் ஹோலன்ட் பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது யார்? எதற்காக அந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது? என்ற கேள்விக்கு. இதுதொடர்பாக நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை, இந்திய அரசு இந்த நிறுவனத்தை பரிந்துரைத்தது. இதையடுத்து, டஸால்ட் நிறுவனம் அம்பானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. எங்களுக்கு வேறு வழியில்லை எங்களிடம் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என்றார்.  ஏற்கனவே ரபேல் குறித்து பாஜகவினர் பொய் கூறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் தற்போது முன்னாள் பிரெஞ்சு அதிபரின் பேட்டி பாஜக மீது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: