மோடி ஆட்சியில் குண்டுவெடிப்பு இல்லை:
சத்குரு ஜக்கிவாசுதேவ் சத்தாய்ப்பு?

“கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும். நடந்த சில குண்டுவெடிப்புகள் காஷ்மீர் மற்றும் எல்லை புறத்தில் மட்டும் நடந்துளளது” என்று பேசியுள்ளார். பேசிய இடம் மும்பை.

இளமையும் “உண்மையும்” என்ற தலைப்பில் பேசும்போது உண்மைக்கு மாறாக அல்ல எதிராக வாய்மலர்ந்துள்ளார். மோடிக்கு சிறப்பு சான்று வழங்கி உள்ளார்.

இந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளன என்பதை முழுபூசணிக்காயை சோற்றில் வைத்து மறைப்பது போல் பேசியுள்ளார்.

2016-ல் மட்டும் 406 குண்டுவெடிப்புகள் நடந்துள்ளதாக அரசு அறிக்கையை 11.4.2017 அன்று பாராளுமன்றத்தில் வைத்துள்ளது.

இந்த 406 குண்டுவெடிப்புகளில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் 69-ல் வெடிமருந்துகளை கொண்டு வெடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றுது.

இந்த குண்டுவெடிப்பில் 118-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் 505-க்கும் மேற்பட்டவர்கள் காயம் என்று அரசு அறிக்கையே கூறுகின்றது.
காஷ்மீர், மணிப்பூர்,கடந்தும் மத்திய பிரதேஷ், பிஹார், சத்தீஷ்கர், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என் குண்டுவெடிப்புகள் நடைபெற்றுக்கொண்டுதான் உளளது.

2018 ஜனவரி 19-ம் தேதி பிஹாரின் புத்தகயாவில் குண்டுவெடித்ததை ராஜசபாவில் அறிவித்துளளனர்.அங்கு ஏராமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2017 மார்ச் 7-ம் தேதி போபால் உஜ்ஜைனி பாசஞ்சர் ரயிலில் ஜப்தி ரயில் நிலையத்தின் அருகில் குண்டுத்து 11 பேர்கள் காயம் அடைந்தனர்.

பிஹாரின் போஜ்பூர் சிவில் கோர்ட்டில் ஜனவரி 23 2015-ல் குண்டுவெடித்து 18 பேர்கள் காயம் அடைந்தனர் இருவர் மரணமடைந்தனர்.
2014- டிசம்பர் 28 பெங்களுருவில் சர்ச்தெருவில் குண்டுவெடித்து ஒருவர் இறந்தார் மூன்றுபேகர்கள் காயம் அடைந்தனர்.

2016-குண்டுவெடிப்பில் ஜம்மு-காஷ்மீரில் 69, சத்தீஷ்ரில் 60 மணிப்பூல் 40 கேரளாவிலி 33 தமிழ்நாட்டில் 32 என ஐஇடி பயன்படுத்தி வெடித்துள்ளனர்.

இந்தியாவில் 2012-ல் 365, 213-ல் 283. 2014-ல் 190, 2015-ல் 268 2016-ல் 406 குண்டுவெடிப்புகள் நடைபெற்றுள்ளது.

இத்தைனையும் மறைத்து சத்துகுரு ஜக்கி வாசுதேவ் மோடிக்கு பொய்யான நற்சான்று வழங்கிட காரணம் வளைத்த காடுகளை பாதுகாக்கவா? அல்லது புதிய காடுகளை வளைக்கவா?

Leave a Reply

You must be logged in to post a comment.