ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான பேரத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அதிர்ச்சிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹாலண்டே அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரபேல் பேரத்தில் பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட உடன்பாட்டில், இந்திய அரசின் சார்பில் முன்மொழியப்பட்டது ஒரே ஒரு நிறுவனத்தின் பெயர்தான்; அது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம்தான்; எங்கள் முன்பு வேறு எந்த வாய்ப்பும் முன்மொழியப்படவில்லை; எனவே அவர்கள் அளித்த அந்த ஒரே நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டோம் என்று பகிரங்கமாக ஹாலண்டே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

கோடான கோடி இந்தியர்களிடம் ரபேல் பேரம் தொடர்பாக மோடி அரசு பொய்களை கூறிக்கொண்டிருக்கிறது என்பது இதன் மூலம் இன்னும் உறுதியாகிறது. பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதில் சிறு துளி அளவிற்குகூட அனுபவம் இல்லாத ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் இவ்வளவு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மோடி அரசு ஏன் வழங்கியது? என்ற கேள்விக்கு இந்திய மக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு பதில் வேறொன்றும் இல்லை… மோடி அரசும் அனில் அம்பானியும் கூட்டுக் களவாணிகள்.

Leave A Reply

%d bloggers like this: