திருப்பூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணனின் தந்தையும், கட்சியின் முதுபெரும் உறுப்பினருமான வி.செல்லையாவுக்கு வெள்ளியன்று செங்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக வியாழனன்று மரணமடைந்த வி.செல்லையா (84) உடலுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, சி.பத்மநாபன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், கரூர் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, தீக்கதிர் மதுரை பதிப்பு பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், தீக்கதிர் எண்மப் பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் பாலா, மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் மற்றும் தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட மூத்த தலைவர் கே.துரைராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலப் பொதுச் செயலாளர் பி.மாரிமுத்து உள்பட கட்சி, வர்க்க வெகுஜன அமைப்பின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, நிர்வாகிகள் காட்டே ராமசாமி, செந்தில்குமார், திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மோகன் கார்த்திக், ஆசிரியர் பாலு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், முத்துராமலிங்கம், திராவிடர் கழக நிர்வாகிகள் துரைசாமி, சண் முத்துக்குமார் உள்பட மாற்றுக் கட்சி, பொது நல சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று காலை 11 மணியளவில் தோழர் வி.செல்லையாவின் உடல் செங்கொடி போர்த்தப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் செல்லையாவின் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் ஒப்படைப்பு
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருப்பிட மருத்துவ அதிகாரி சௌந்திரபாண்டியனிடம் செல்லையாவின் உடல் மற்றும் உடல்தான பத்திரம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தோழர் செல்லையாவின் மகனும், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளருமான செ.முத்துக்கண்ணன் மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைத்தார். கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், யு.கே.வெள்ளிங்கிரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துனை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக தோழர் வி.செல்லையா விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.