சேலம்,
தேசிய அளவிலான நாணய கண்காட்சி துவங்கியது.சேலம் காயின் சொசைட்டி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வாசவி மகாலில் வெள்ளியன்று 9ம் ஆண்டாக நாணய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மன்னர்கள் காலத்து நாணயங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், முகலாயர்கள் காலத்துநாணயங்கள், இந்திய அரசில் அச்சிடப்பட்ட பழங்கால நாணயங்கள், தலைவர்கள் முகம் பொறித்த புதிய நாணயங்கள் மற்றும் அனைத்து நாடுகளின் ரூபாய் நோட்டுகள், பழங்கால அலங்கார பொருட்கள், தேச தலைவர்களின் தபால் தலைகள் உள்ளிட்ட சங்க காலம் முதல் தற்போது பயன்படுத்தும் புதிய ரூபாய் நோட்டுகள் வரை  கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சி வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள நாணய சேகரிப்பாளர்கள் சேர்த்த நாணயங்கள் மற்றும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுல்தான் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: