பெய்ஜிங்,
சீனாவின் ராணுவ அமைப்பிற்கு அமெரிக்கா விதித்திருக்கும் தடையை விலக்கி கொள்ள வேண்டும். அமெரிக்கா தனது தவறு உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். அல்லது கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே ஏற்கனவே வர்த்தகப்போர் தீவிரமடைந்திருக்கும் இந்த வேளையில் ரஷியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்திருக்கிறது.
கடந்த ஜுலை 6ஆம் தேதி முதல் சீனாவின் மீது அமெரிக்கா வர்த்தகப் போரை தொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரியை 10 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக உயர்த்திது. இதன் மூலம் அமெரிக்கா 20 ஆயிரம் கோடி டாலர் ஆதயாம் அடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இதுவரை தொடுத்து வரும் வர்த்தகப் போரின் மூலம் டோனால்ட் டிரம்ப் அரசு எந்த உண்மையான முன்னேற்றத்தையும் பெறவில்லை. தற்போது அமெரிக்கா பொறுமை இழந்துள்ளது. டிரம்ப் அரசு, ஒருசார்பாக வர்த்தகப்போர் தொடுத்ததால் அமெரிக்க மக்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, உள்நாட்டு மற்றும் வெளிப்புறத்தில் இருந்து எழுந்து வரும் அழுத்தங்களை டிரம்ப் அரசு எதிர்கொள்கிறது. ஆனால், உரிய தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், டிரம்ப் அரசு முன்பு இருந்ததை போல் மீண்டும் செயல்பட்டு, அச்சுற்றுதல் மற்றும் மிரட்டலை தீவிரமாக்கி வருகிறது. தற்போது வரை, அமெரிக்கா மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் பயன் அளிக்கவில்லை.
இந்நிலையிலேயே அமெரிக்கா சீன ராணுவ அமைப்பிற்கு எதிராக பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இதற்கு சீனா தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை கொள்கையை மீறுவதாகும். இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும் நடவடிக்கையாகும். எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவிடம் கூறிவிட்டோம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.