கோவை,
போதைப் பொருள் வழக்கில் கைதானவரை ஜாமீனில் எடுக்க போலி மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்த விவகாரத்தில் வழக்கறிஞர் மற்றும் மருத்துவர்களின் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போதைப் பொருள் வழக்கில் கைதான முகமது சிஹாப் என்பவரை விடுவிக்க அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆவணங்களில் சந்தேகமடைந்த நீதிபதி, சான்றிதழ் குறித்த ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதில் குற்றவாளிக்கு ஆஜரான வழக்கறிஞர் ஜக்ரியா, தனியார் மருத்துவமனை மருத்துவர் ராமகிருஷ்ணன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உஷா, மன்சூர் உள்ளிடோர் போலியான சான்றிதழ்களை அளித்ததை உறுதிப்படுத்தினார். இதையடுத்து, இவர்கள் மீது போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா கடந்த செப்.11 ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும், கோவை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில் வழக்கினை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை எழுத்தர் வசந்தகுமாரின் புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர், மருத்துவர்கள் என 6 பேர் மீது 193, 196, 200, 468,471 420 இ.த.ச., / 109, இ.த.ச., பிரிவுகளில் காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: