ஈரோடு,
மத மோதலை தூண்டி வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி பெருந்துறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து தரக்குறைவாக பேசிவரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக வெள்ளியன்று பெருந்துறை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பெருந்துறை தாலுகா செயலாளர் வி.ஏ. விசுவநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சகாதேவன், ஒன்றியச்செயலாளர் மதன்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தின் பெண் நிர்வாகிகள் உட்பட அனைவரையும் காவல்துறை ஆய்வாளர் ராம் பிரபு தலைமையிலான காவலர்கள் அராஜகமான முறையில் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave A Reply

%d bloggers like this: