லக்னோ,
உத்திரப்பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்யச்சலுக்கு கடந்த 6 வார காலத்தில் மட்டும் 84 பேர் பலியாகியிருக்கின்றனர். இந்த காய்ச்சல் என்ன காய்ச்சல், இதனை கட்டுப்படுத்துவதற்கு என்ன வழி என்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரெல்லி, சிடபூர், பஹ்ரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 6 வார காலமாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறித்து உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இயக்குனர் கூறியதாவது: மர்ம காய்ச்சல் குறித்து ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க சிறப்பு மருத்துவர்கள் குழுக்கள் அனுப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொது மக்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறாமல் காய்ச்சல் முற்றிய பின்னரே மருத்துவமனையை வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என தெரிவித்துள்ளார். காய்ச்சல் பரவி 6 வார காலம் ஆகிவரும் நிலையிலும் இதுவரை இது எந்த வகை காய்ச்சல் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு யோகி ஆதித்தியநாத் அரசு செயலிழந்து இருக்கிறது என பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்..

Leave A Reply

%d bloggers like this: