லக்னோ,
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 45 நாட்களில் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாஹ்ரைச் என்ற மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 45 நாள்களில் மட்டும் சுமார் 71 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்தக் குழந்தைகள் அனைத்தும் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர், “இறந்த அத்தனை குழந்தைகளும் பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. இந்த மருத்துவமனையில் மொத்தம் 200 படுக்கைகள் உள்ளன. ஆனால், தற்போது இங்கு 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றவே தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வராக பதவியேற்ற காலத்தில் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும் என உறுதி அளித்தார். ஆனால் பின் வந்த நாட்களில் பின் அதைக்கண்டு கொள்ளாததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: