சென்னை: தமிழகம் முழுவதும் குழு அமைத்து ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 1 கோடியே 14 லட்ச ரூபாய் செலவில், வாய்-முக புனரமைப்பு மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அறுவை சிகிச்சைக்கு உதவும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் அமைந்த நவீன கருவி, 30 படுக்கைகள் கொண்ட புதிய உள்நோயாளிகள் பிரிவு, பல் மருத்துவக் கல்லூரிக்கான புதிய பேருந்து, பல் மருத்துவர்களின் ரத்த தான முகாம் ஆகியவற்றையும் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறுவை சிகிச்சைக்கு முன் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து முப்பரிமாண தொழில்நுட்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றார். 5 ஆண்டுகளாக வாய் திறக்க முடியாமல், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்த சிறுவனுக்கு முதன் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.