போபால்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் ஹின்ஜேவாடி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மாலையில் கிராமத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி இளைஞர்கள் இருவர் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பலாத்காரம் குறித்து வீட்டில் தகவல் தெரிவித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என சிறுமிகளை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெற்றோர்களுக்கு சம்பவம் தெரியவந்துள்ளது. சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோமாவில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கைது செய்தவர்கள் மீது  போஸ்கோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: