கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில், பெண் ஒருவரை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த அமலேந்து சட்டோபாத்யாய என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநில பாஜக பொதுச்செயலாளராக இருந்தவர், அமலேந்து சட்டோபாத்யாய. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்தத் தலைவர். தற்போது ஆர்எஸ்எஸ் நுகர்வோர் அமைப்பின் பொறுப்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில், அமலேந்து தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகவும், அவரது பேச்சைக் கேட்டு கருச்சிதைவும் கூட செய்து கொண்ட நிலையில், தற்போது அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் பெண் ஒருவர், மேற்குவங்கத்தின் பெகலா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து அமலேந்து மீது பாலியல் வல்லுறவு, நம்பிக்கை மோசடி, கருச்சிதைவுக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.