பசுவை நாட்டின் தாயாக ஏற்கும் தீர்மானத்தை உத்தரகண்ட் சட்டப்பேரவையில் கொண்டுவந்தவர் அமைச்சர் ரேகா ஆரியா. இந்நிலையில், அவர், பசு பாதுகாப்பு குறித்து, பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.

அதில், ‘பசுக்கள் மட்டுமே ஆக்சிஜனை சுவாசித்து மறுபடியும் அதே ஆக்சிஜனையே வெளியேற்றுகின்றன; இவ்வாறு ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்காக பசு மட்டுமே இருக்கிறது; இதனால், மக்களின் நல்வாழ்வுக்குத் துணைபுரியும் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பசுக்களைப் பாதுகாப்பதற்காக மாநிலம் முழுவதும் மாட்டுக்கொட்டகைகள் அமைக்கும் வேலையை உத்தரகண்ட் அரசு செய்து வருவதாகவும், பசுக்களைப் பாதுகாப்பது என்பது தேசபக்தியை பெறுவதற்கான மற்றொரு வழியாகும் என்றும் உபதேசம் செய்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: