டேராடூன்:
மத்திய பாஜக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல், மக்களைப் பற்றி கவலைப்படுவதை விட, மாடுகள் மீதே அக்கறை காட்டி வருகிறது. உண்மையில் இவர்களுக்கு மாட்டின் மீது அக்கறை இல்லை. மாறாக, இஸ்லாமியர்கள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என நாட்டின் பெரும்பான்மை மக்களை, மாட்டிறைச்சியின் பேரால் துண்டாட வேண்டும் என்ற வன்மமே இதற்குப் பின்னிருக்கும் அரசியலாகும்.இதன்காரணமாகவே, பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடை கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்களும் கூட, பசு குண்டர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பசு நாட்டின் தாய் (ராஷ்ட்ர மாதா) என பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில் அதிரடித் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் ரேகா ஆரியா, முன்மொழிந்த இந்த தீர்மானம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் உத்தரகண்ட் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.