திருச்சி : மணப்பாறை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். சின்னமணப்பட்டியில் கட்டப்பட்ட நிழற் குடையை திறந்து வைத்த அவர், அப்பகுதியில் நடைபெற்ற பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், பெயரளவுக்கு குறைகளை கேட்க வர வேண்டாம் என்றும் திரும்பிச் செல்லுங்கள் எனக் கூறினார். இதனால் ஆவேசமடைந்த தம்பிதுரை, தான் ஓட்டு கேட்டு வரவில்லை என்றும், பொதுமக்களிடம் குறைகளை கேட்க வந்ததா கவும் கூறியதோடு, தன்னை திரும்பி போ என சொல்ல அதிகாரம் இல்லை என பதில் அளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: