சென்னை: மகன் தொல்காப்பியனுடன் குடும்ப சிவில்வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த தமிழ் அறிஞர் கி.த.பச்சையப்பன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 85. கி.த.பச்சையப்பன் தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்தார். தமிழியக்கம் என்ற தனித் தமிழ் இதழைநடத்தி வந்த கி.த.பச்சையப்பன், தமிழோசை நாளேட்டின் மொழிநடை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் ஆவார். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு மூத்த அரசியல் வாதிகளின் ஆசிரியராக இருந்தவர் கி.த.பச்சையப்பன். 1935ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்து பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து புதுச்சேரியைப் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப் போராடியவர். பத்தாண்டுகளாக நெஞ்சக நோயால் பாதிக்கப்பட் டிருந்த போதும் தமிழ், தமிழர் உரிமைப் போராட்டங்களில் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: