சேலம்,செப் 20-
             அரசுக்கு சொந்தமான டேன்-டீ தொழிற்சாலையில் அவுட்சோர்சிங் விடுவதை தடுத்திட வேண்டும் என்று சேலம் விபிசி நினைவக்த்தில்வியாழனன்று நடைபெற்ற தமிழ்நாடு தோட்ட தொழிலாளர்  ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
          தமிழ்நாடு தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வி.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசுக்கு சொந்தமான டேன்-டீ நிறுவனத்தில் தேயிலையை தனியாருக்கு அவுட்சோர்சிங் முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. அதை உடனடியாக நிறுத்தி நிறுவனத்தை புனரமைக்க உரிய நிதி அளிக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியம், பிஎப், ஓய்வூதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். 2002-04வரை  பிடித்தம் செய்யப்பட்டு வழங்காமல் இருந்த நிலுவை தொகையை தமிழக தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த பிடித்தமும் இல்லாமல் வழங்க வேண்டும்.
      நீலகிரி உள்ளிட்டு அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் இருபது சதம் போனஸ் மற்றும் பத்து சதம் கருணை  தொகை வழங்க வேண்டும். சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, சம்பள சீட்டு வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் பணம் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலச்சட்டப்படி வீட்டுவசதி, மருத்துவ வசதி ஏற்படுத்திதர வேண்டும். பத்தாண்டுகளாக பராமரிக்கப்படாத வீடுகளை பராமரிக்க வேண்டும். வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு பதினைந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ரப்பர் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில்சங்கத்தின் ஒருங்கினைப்பு குழு கன்வீனர் கே.சி.கோபிகுமார், சிஐடியு மாநில துணைத்தலைவர்கள் எஸ்.ஆறுமுகம், டி.உதயகுமார், மாநில குழு உறுப்பினர் ஜெ.ஆல்துரை மற்றும் சேலம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இருந்து ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.