ஜனநாயகமற்ற முறையில் முத்தலாக் அவசரச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அரசியல் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்: “தற்போது மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் தொடர்பான அவசரச் சட்டம், இஸ்லாமிய பெண்களின் நலனை தாண்டி, உள்நோக்கம் கொண்டதாகவும், வேறு வழியின்றியே அமல்படுத்தப்பட்டுள்ளது போலவும் தெரிகிறது.

முத்தலாக் தொடர்பாக மசோதா இன்றளவும் மாநிலங்களவையில் நிழுவையில் தான் வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது முறையான விவாதங்கள் நடத்தப்பட்டு, தேர்வுக் குழுவுக்கும் பரிந்துரைக்கவேண்டியுள்ளது. தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த அவசரச் சட்டம், ஜனநாயகமற்ற முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முத்தலாக் முறையிலான விவாகரத்தை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடை செய்துவிட்டது. இந்த உத்தரவை மீறினால் மூன்றாண்டு கால சிறை தண்டனை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம், பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட உள்ள பெண்களுக்கு ஒருபோதுமே உதவாது. இந்த அவசரச் சட்டம், அரசியல் உள்நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விரிவான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்படவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.