ஜங்சௌ: 
விக்டர் ஓபன் என அழைக்கப்படும் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர்,அந்நாட்டின் கிழக்கு பகுதி நகரமான ஜங்சௌ நகரில் செவ்வாயன்று தொடங்கியது.

வியாழனன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிந்து,தாய்லாந்து வீராங்கனை புஷாணனை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 23-21 என்ற புள்ளிகணக்கில் தாய்லாந்தின் புஷாணன் கைப்பற்றி சிந்துவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.பின்னர் சுதாரித்து விளையாடிய சிந்து அடுத்த இரண்டு செட்களை 21-13,21-18 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி,சீன தைபேவின் ஹுங் லிங் – சி லின் ஜோடியிடம் 9-21,10-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Leave A Reply

%d bloggers like this: