இராமேஸ்வரம்:
கடலோர சமூகங்களின் நலனைக்காவு வாங்கும் பேரழிவுத் திட்டமான சாகர்மாலா திட்டத்தை எதிர்த்தும்,சாகர்மாலா திட்டத்தை அமல்படுத்து வதற்காக மோடி அரசு தற்போது கொண்டு வந்துள்ள கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் 2018 வரை படத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் மீன்பிடித்தொழிலாளர்களின் பிரச்சார இயக்கம் செப்டம்பர் 21 வெள்ளியன்று துவங்குகிறது.

இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள ‘வெளிநாட்டு மீன்பிடி படகுகளை  ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்’ மூலம் தமிழக மீனவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது; உலகி லுள்ள வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது; எனவே இந்திய அரசு ராஜீய ரீதியில் தலையிட்டு இந்தச் சட்டத்திலிருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் செப்டம்பர் 21,22,23 ஆகிய
தேதிகளில் கடற்கரையோர மாவட்டங் களில் இப்பிரச்சார இயக்கம் நடைபெறு கிறது என அமைப்பின் பொதுச் செயலாளர் சி. ஆர். செந்தில்வேல் கூறி யுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.