கரூர்: கரூர் மாவட்டம் பரமத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 5 கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருமுருகன் ப்ளூ மெட்டல், விநாயகா ப்ளூ மெட்டல், பொன் விநாயகா ப்ளூ மெட்டல், பால விநாயகா ப்ளூ மெட்டல், கற்பக விநாயகா ப்ளூ மெட்டல் ஆகிய 5 கல்குவாரிகளில் திருச்சியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். வசந்தம் நகர், கேவிபி நகர், தங்கவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளின் உரிமையாளர் வீடுகள், அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவடைந்த பின்னர் கைப் பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: