கடலூர்: வீராணம் ஏரியில் 22 நாட்களாக தொடர்ந்து முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காகவும் நீர் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஏரியின் நீர் மட்டம் சரிந்த நிலையில், காவிரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 11ஆம் தேதி வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து, 30 ஆண்டுகளுக்கு பின்பு வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 28ஆம் தேதி மீண்டும் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அன்று முதல் இன்று வரை 22 நாட்களாக தொடர்ந்து ஏரி முழு கொள்ளளவில் உள்ளதால், கடல் போல் காட்சியளிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: