புதுதில்லி;
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிகரித்து வருவதாக இந்தியப் பிரதமர் மோடியிடம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிகரித்துள்ளதாகவும் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாகவும் கஜினி நகரை முற்றுகையிட்டுள்ள தாலிபான் படையினருக்கு உதவியாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தீவிரவாதிகள் உள்ளதையும் மோடியிடம் அஷ்ரப் கனி கவலையுடன் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காகக் காபூலுக்கு வந்த இந்தியர் நசீதுல் ஹம்சாபர் என்பவரை ஆப்கன் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

%d bloggers like this: