மதுரை: எச்.ராஜா உயர்நீதிமன்றம் மற்றும் காவல் துறையை அவதூறாக பேசிய விவகாரத்தில் 5 பேரின் முன் ஜாமீன் குறித்து காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மெய்யபுரம் மற்றும் அய்யனார்புரம் கிராமங்களைச் சேர்ந்த 5 பேரின் மனுவில் தங்களது கிராமத்துக்கு எச்.ராஜாவும் இந்து முன்னணிப் பிரமுகர்களும் வந்ததாகவும், அப்போது எச்.ராஜா பேசியவற்றுக்கும் கிராம மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் அடையாளம் தெரியாத பலர் என வழக்குப் பதிவு செய்து போலீசார் தங்களையும் கிராம மக்களையும் கைது செய்ய முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மெய்யபுரம் கிராம மக்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மெய்யபுரம் காவல் ஆய்வாளரிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: