புதுதில்லி/இஸ்லாமாபாத்:
இருதரப்பு அமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவக்கு வதற்கு முயற்சிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுதிய கடிதத்தால், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கான சூழல் உயிர் பெற்றுள்ளது.

இம்ரான் கடிதத்தைத் தொடர்ந்து  இரு நாட்டு வெளியுறவு அமைச்சர் களும், செப்டம்பர் 25 அன்று துவங்கவுள்ள ஐநா பொதுச் சபை கூட்டத் தின்போது சந்திப்பார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பேச்சு வார்த்தைகள் முற்றாக நின்று போயி ருந்த நிலையில் இம்ரான் கடிதமும் அதற்கு இந்தியாவின் பதிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றது முதல் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து வருகிறார். எனினும் அவர் பாகிஸ்தான் ராணு வத்தின் கைப்பாவையாகவே செயல் படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று
இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. கே. சிங் உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பி வருகிறார்கள். இதனிடையே காஷ்மீரில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சண்டை நிறுத்த மீறல்கள் தொடர்வது எந்த விதத்திலும் குறையவில்லை. செவ்வாயன்று இரவு கூட ரஜோரி எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் நரேந்தர் சிங், பாகிஸ்தான் துருப்புக்களால் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய பின்னணியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பர் 14 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என்றும் இரு நாடு களுக்கிடையே பரஸ்பரம் அமைதியை உருவாக்குவதற்கான முயற்சிகளை கட்டமைக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக ஒரு முன்மொழிவையும் அவர் வைத்துள்ளார். நியூயார்க்கில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களது சந்திப்பு நடைபெற உள்ளது; அந்த சந்திப்புக்கு முன்ன தாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேசி ஆகியோர் சந்தித்து பேசுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இம்ரான் கான் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்
இந்நிலையில் இரு அமைச்சர்  களும் நியூயார்க்கில் சந்தித்து பேசு வார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழனன்று மாலை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப் பிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், பாகிஸ்தானின் வேண்டு கோளை ஏற்று, இரு நாடுகளது வெளி யுறவு அமைச்சர்களின் சந்திப்பு நியூயார்க்கில் நடைபெறும் எனத் தெரிவித் தார். ஆனால் இது, பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைபாட்டில் மாற்றம் செய்ததாக கருதப் படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூயார்க்கில் எந்த நாளில் இந்த சந்திப்பை நடத்துவது என்பது தொடர்பாக ஐநா சபைக்கான இரு நாடுகளது நிரந்தர தூதரகங்கள் முடிவு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது எதைப் பற்றி பேசுவது என்ற நிகழ்ச்சி நிரல் இன்னும் முடிவு  செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். (பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.