கோவை,
15 சதவிகித உயர்வுடன் பென்சன் மாற்றம் வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் 5 ஆவது கோவை மாவட்ட மாநாடு தோழர் கே.ஆர்.ஆறுமுகம் நினைவரங்கத்தில் (திருச்சிசாலை எஸ்.என்.அரங்கத்தில்) செவ்வாயன்று நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் எல்.உமாபதி தலைமையில் நடைபெற்ற பொது அரங்க மாநாட்டை மாநிலச் செயலாளர் சி.கே.நரசிம்மன் துவக்கி வைத்து உரையாற்றினார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சந்திக்கும் பிரச்சனைகள், கோரிக்கைள் குறித்து எஸ்.மோகன்தாஸ், பி.மாணிக்கமூர்த்தி, பி.சௌந்திரபாண்டியன், கே.பங்கஜவள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனையடுத்து மாவட்ட துணை தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற பொருளாய்வுக்குழு மாநாட்டில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் மற்றும் டி.கே.பிரசன்னன், சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதனையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சங்கத்தின் தலைவராக எம்.ராஜா, செயலாளராக வி.வெங்கட்ராமன், பொருளாளராக வெங்கடராஜூலு மற்றும் 22 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்
பிஎஸ்என்எல் டவர்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. விடுபட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதிய ஊழியர்களுக்கு 78.2 சதவிதம் பஞ்சப்படி வழங்க வேண்டும். 1.1.2017 முதல் 15 சதவிகிதம் உயர்வுடன் பென்சன் மாற்றம் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 1.1.2017 முதல் ஊதிய மாற்றம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: