நாமக்கல்,
60 வயது பூர்த்தியடைந்த விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி ராசிபுரத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

வீடு இல்லாத விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். ராசிபுரம் வட்டத்தில் ஏரி குளங்களை மற்றும் நீரோடைகளை தூர்வார 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை முழுமையாக பயன்படுத்திட வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகயை வலியுறுத்தி ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புபுதனன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் குப்பண்ணன் முன்னிலை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம் சிறப்புரையற்றினர். இந்த ஆர்ப்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.