திருச்சிராப்பள்ளி;
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 7 ஆவது மாநில மாநாடு திருச்சியில் புதனன்று துவங்கியது. மாநாட்டு கொடியை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் குமாரசாமி ஏற்றி வைத்தார்.

மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் என்.சின்னசாமி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் பிச்சைராஜன் வாசித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் வரவேற்றார். மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க தலைவர் நெ. இல. சீதரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தலைவர் எஸ்.கிருஷ்ணன், ஓய்வுப்பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க செயலாளர் கோ.ஆதிகுருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டு மலரை மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் வெளியிட அதை ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

செயலாளர் அறிக்கையை பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன், ஸ்தாபன கணக்கு அறிக்கையை பொருளாளர் எஸ்.ராமநாதன், ஒளிக்கதிர் கணக்கு அறிக்கையை பொறுப்பாளர் எஸ்.கணேசன் ஆகியோர் வாசித்தனர்.

சுற்றுச்சூழல் குறித்து என்.சின்னசாமி, கே.பாலகிருஷ்ணன், ஸ்தாபனம் குறித்து எஸ்.ஜெகதீசன், வி.மைக்கேல், இன்றைய அரசியலும் தொழிலாளி வர்க்கமும் என்ற தலைப்பில் எஸ்.எஸ்.சுப்ரமணியன், கே.ஆர்.முத்துசாமி, பொதுத்துறையும் மக்கள் கடமையும் என்ற தலைப்பில் எஸ்.ராஜாமணி, டி.சாமுவேல்ஐசக் சமுதாயத்தில் ஓய்வூதியர் நிலைபாடு என்ற தலைப்பில் ஆர்.ராமநாதன், என்.பிச்சுமணி, இந்தியாவில் பெண்கள் நிலை என்ற தலைப்பில் எம்.பாலசுப்பிரமணி, டி.சவுந்திரராஜன் ஆகியோர் பேசினர்.

முன்னதாக வின்னேஷ் ஓட்டல் அருகில் இருந்து பேரணி புறப்பட்டு அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மாநாட்டு திடலை வந்தடைந்து. முடிவில் சிறகுகள் குழுவினரின் இன்னிசையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இரண்டாம் நாளான வியாழனன்று நடைபெறும் மாநாட்டில் அறிக்கைகள் மீதான விவாதம், புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.