திருப்பூர், செப். 19 –
கருத்துரிமைக்கு எதிராக அடக்குமுறையை ஏவும் ஜனநாயக விரோத, மக்கள் விரோத மத்திய மோடி அரசு, மாநில எடப்பாடி பழனிச்சாமி அரசுகளைக் கண்டித்து பொங்கலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
செவ்வாயன்று மாலை பொங்கலூரில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்துக்கு கிளை உறுப்பினர் ஜி.சுந்தரம் தலைமை வகித்தார். இதில் மோடி, எடப்பாடி அரசுகளின் ஜனநாயக விரோத, கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் உரையாற்றினர்.
இதில் கட்சி ஊழியர்கள் விஸ்வநாதன், நிர்மலாதேவி, துரைசாமி, பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக காந்திமதி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: