ஈரோடு,
பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் 3 மற்றும் 4 மாதங்களான பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயில்வதற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 100 சதவிகித மானியத்தில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள சாலை போக்குவரத்து நிறுவனம், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மற்றும் 4 மாதங்கள் வரை பல் பராமரிப்பு உதவியாளர், அவசர சிகிச்சைபிரிவு உதவியாளர், மருத்துவ கவனிப்பு உதவியாளர், மருத்துவ ஆய்வக நுட்புனர் உதவியாளர், அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர், மருந்தாளுநர் பயிற்சி உதவியாளர், நுண்கதிர் வீச்சு பிரிவு உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உதவியாளர் போன்றபணிகளுக்காக மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேருவதற்கு அனைத்து வகுப்பை சேர்ந்த ஆண், பெண் ஆகிய இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் அரசே ஏற்கிறது. இதுதவிர பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்கு சீருடை வழங்குவதற்கும், உணவு மற்றும் போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை விதிமுறைகளின்படி வழங்கப்படும்.இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். 18 வயதிற்கு குறையாமலும், 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தற்போது வேலை ஏதும் இல்லாமலும், எந்த கல்வி நிறுவனத்திலும் மாணவ, மாணவியராகவும் இருக்கக்கூடாது. இப்பயிற்சிகள் சாலை போக்குவரத்து நிறுவனம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேனடோரியம், பெருந்துறை, ஈரோடுமாவட்டம் என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஒரு வெள்ளைத்தாளில் பெயர், தந்தை பெயர், அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், கைபேசி எண், பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, சாதி, குடும்ப அட்டை எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டை எண் ஆகியவைகளை தெளிவாக எழுதி புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு 8-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் உள்ள கல்வி தகுதிக்கான சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், கல்வி நிலைய மாற்றுச் சான்றிதழ், செல்லதக்க சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார்அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவைகளின் ஒளிப்பட நகல்களுடன் முதல்வர், சா.போ.நி-பெருந்துறை மருத்துவக் கல்லூரி, பெருந்துறை சேனடோரியம்-638 053, ஈரோடு மாவட்டம் (தொலைபேசி எண் 04294-220910, 98428 99515) என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.