கோவை,
கோவை சிங்காநல்லூரில் புதியதாக டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு மக்களுக்கு இடையூரில்லாமல் இருந்தது. இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை ஆகியவை உள்ள நிலையில் தற்போது புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதை அறிந்த பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் திமுக சார்பில் வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுகநகர செயலாளர் ஜெகதீஸ்வரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், தேமுதிக பேரூராட்சி செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மக்களின் கோரிக்கையை மதிக்காமல் மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் அனைத்துக் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.