மன்னார்குடி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வடுவூர் தென்பாதி கிராமத்தில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண்மாதிரி சேகரிப்பு தொடர்பான செயல்விளக்க பயிற்சி  நடைபெற்றது. திட்டஒருங்கிணைப்பாளர் பொறுப்பு இராமசுப்ரமணியன்  இப்பயிற்சிக்கு தலைமை வகித்தார். இதில் பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் இராஜாரமேஷ் கலந்து கொண்டு மண்ணீன் வகைகள் மற்றம் அவற்றின் பண்புகள், களர் உவர்நல சீர் சிருத்த முறைகள்,மற்றம் இயற்கை முறையில் மண்ணீன் வளத்தைப் பெருக்குவதற்கு  தொழு உரம் பயன் படுத்துதல்,பசுந்தாள் பயிர்களான சணப்பு,தக்கை பூச்சி,கொழுஞ்சி போன்ற வற்றை சாகுபடி செய்தல் உயிர்உரங்களான அசோஸ்பைரில்லம்,பாஸ்போபாக்டீரியா பயன்படுத்துதல்,தேவை படும் போது இரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.மேலும் பாதிக்கப்பட்ட மண்ணில் சாகுபடி செய்தர் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்என்றார். தமிழ்நாடு நிலவள நீர்வள திட்டத்தில் 25 ஏக்கர்  பரப்பளவில் பசுந்தாள் பயிர்கள் விதைத்து அதனை பூக்கும் தருவாணில் மடக்கி உழுது மண்ணின் வளம் பெருகுவதை விவசாயிகளுக்கு செயல்விளக்கமாககாண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பெருந்திரளாக விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: