ஹைதராபாத் :

தெலுங்கானா மாநிலத்தில் அம்ருதா என்ற ஆதிக்க சாதிப்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞர் பெருமுல்லா பிரனாய் படுகொலைக்கு 2.5கோடி ரூபாய் வரை பேரம் நடைபெற்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நல்கொண்டாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காவல் கண்காணிப்பாளர் ஏ.வி. ரங்காநாத் கூறுகையில், பிரனாயை கொலை செய்த சுபாஷ் சர்மா, அஸ்கர் அலி, கரீம் ஆகியோர் அடங்கிய கும்பல் கடந்த ஜூலை பெண்ணின் தந்தை மாருதி ராவிடம் 2.5 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். கடைசியில் பேரம் 1 கோடி ரூபாய்க்கு முடிவாகியுள்ளது. முன்பணமாக 15 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பிரனாயை ஹைதராபாத்தில் அழகு நிலையம் ஒன்றில் கொலை செய்ய முயன்றபோது அவரது மனைவி அமுதா மற்றும் அவரின் சகோதரர் இருந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பின்பு, ஆகஸ்ட் 22ம் தேதி சுபாஷ் வாடகை கார் ஓட்டுநர் போல் பிரனாய் வீட்டிற்கு சென்று சூழ்நிலையை அறிந்து வந்துள்ளார். பின்பு செப்டம்பர் 1ம் தேதி மனைவி அம்ருதாவை கடத்தி பின்பு பிரனாயை கொலை செய்யத்திட்டமிட்டதும் இடையில் கைவிடப்பட்டுள்ளது.

கடைசியாக செப்டம்பர் 14ம் தேதி சுபாஷ் மருத்துவமனை முன்பு வைத்து பிரனாயை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை அங்கிருந்த CCTV காமிரா பதிவு மற்றும் `நகரங்களின் முழுவதுமிருந்த CCTV காமிரா பதிவுகள் மற்றும் உளவு பிரிவு மூலமும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், கது செய்யப்பட்டவர்களின்மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு 302ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.