நாமக்கல்,
தாட்கோ மூலம் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2018-2019 ம் நிதியாண்டிற்கான தாட்கோ திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே நிலம் வாங்குதல், நிலம் மேம்பாட்டு திட்டம், புதிய மின் இணைப்பு திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல் தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான வருமான உச்சவரம்பு ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதேபோல், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புத் திட்டம் மருத்துவ மையம், மருந்தியல் கண் கண்ணாடியகம் மூட நீக்கும் மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை ஆகும். மேலும் மகளிர் சுய உதவிக் குழு சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவி ஆகியவற்றுக்கு மானியத்துடன் கூறிய நிதி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி மேலாண்மை இயக்குனர் உரிமை நிதி இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதி உதவிகள் உள்ளிட்ட திட்டங்கள் பயன்படும் ஆதிதிராவிடர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை http://application.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் இணைத்து விண்ணப்பதாரர் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல்முகவரி உள்ளிட்டவை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.60 செலுத்தியும் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: