சென்னை;
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை பதில் அளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் , ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சிகிச்சை பெற்றது வரையில் மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டிருந்தது.இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை தெரிவிக்கையில், சர்வரில் புதிய பதிவுகள் சேரும் போது பழைய பதிவுகள் தானாக அழிந்து விடும். 45 நாட்களுக்கு மட்டுமே சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருக்கும். புதிய பதிவுகள் வரவர, பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும் என்பதால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான காட்சிகள் அழிந்துவிட்டன. எனவே அதனை தாக்கல் செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யாததால் அப்பல்லோ மருத்துவனை நிர்வாகி செப்டம்பர் 25 ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியுள்ளது.

ஆளுநர் மாளிகைக்கு கடிதம்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆளுநருக்கோ, முன்னாள் தலைமை செயலாளருக்கோ அறிக்கை அனுப்பப்பட்டதா என்றும் மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவக் குறிப்புகள் வந்தன என்று கேட்டு ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: