ஈரோடு,
தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்யக்கோரி வரி செலுத்துவோர் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள 100 சதவிகித சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், குப்பை வரி என்ற புதிய வரியை சொத்து வரியுடன் வசூலிப்பதை கைவிட வேண்டும். சொத்துவரி ஆய்வின்போது ஒரு கட்டிடத்தில் முன்பகுதி வணிகமாகவும் பின்பகுதி குடியிருப்பாகவும் இருந்தால் ஒட்டுமொத்தமாக வணிகத்திற்கு என்ற வரி விகிதத்தை போடாமல், பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல் பிரித்து வரியை நிர்ணயிக்க வேண்டும். மேலும், வரி உயர்வு சம்மந்தமாக முன்னறிவிப்பு நோட்டீஸ்கள் ஒவ்வொரு கட்டிட உரிமையாளருக்கும், எவ்வாறு வரிவிதிக்கப்பட்டு உள்ளது என்ற முழு விவரத்தை கணக்கிட்டு அந்த தாளை வெளிப்படைத் தன்மையோடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம், அனைத்து தொழில் வணிகர் சங்கங்கள், வீட்டு உரிமையாளர் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: