சேலம்,செப் 19-

மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடும் வகையிலும் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தரக்குறைவாக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை எச்.ராஜா தரக்குறைவாக பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சிறப்பியல்பான மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவிற்கு எச். ராஜா பேசியுள்ளார். இதனால் எச்.ராஜாவை  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். காவல் துறை கைது செய்யாவிட்டால் வாலிபர் சங்கத்தினர் ராஜாவை பிடித்து கொடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். மேலும்
பாஜக  தேசியச் செயலாளர் ராஜா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசிற்கு கோரிக்கைவைத்தனர்.  சேலம் மாவட்டதலைவர் பி.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி, மேற்கு செயலாளர் சிலம்பரசன்,
வடக்கு மாநகர தலைவர் சதீஸ்குமார் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: