திருப்பூர், செப். 19 –
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 18ஆவது அமைப்பு தின விழா திருப்பூர், அவினாசி உட்கோட்ட அலுவலகங்கள் முன்பாக கொண்டாடப்பட்டது.
கடந்த திங்களன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் அவிநாசி உட்கோட்ட அலுவலகம் முன்பாக கொடியேற்றப்பட்டது. உட்கோட்டத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.முருகேசன்  உள்பட சாலைப் பணியாளர் சங்கத்தினர் முன்னிலையில் கோட்டச் செயலாளர் ஆர்.ராமன், கோட்டப் பொருளாளர் ஆர்.கருப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவாக உட்கோட்டப் பொருளாளர் எம்.வெங்கிட்டான் நன்றி கூறினார்.
அதேபோல் திருப்பூர் தெற்கு வடக்கு உட்கோட்டத்தில் உதவிக் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பும் 18ஆவது அமைப்பு தின கொடியேற்று விழா திங்களன்று நடைபெ‌ற்றது. இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.