தூத்துக்குடி;
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியும் அதன் ஊழியர்களும் கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 1921ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. இவ்வங்கியானது 21 கிளைகளுடன் கேரள மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர்.

வங்கி ஊழியர்களின் பங்களிப்புடன், வங்கியும் இணைந்து மொத்தம் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளது. செவ்வாயன்று (செப்.18) வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரி கே.வி.ராமமூர்த்தி, பொதுமேலாளர்கள் மற்றும் திருவனந்தபுரம் மண்டல மேலாளர் ஆகியோர் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள மாநில தொழில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜனிடம் வழங்கினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.