சேலம்,
மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து தரக்குறைவாக பேசிவரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக பேசினார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சேலம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.பிரவின்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், கிழக்கு மாநகரச் செயலாளர் பெரியசாமி, மேற்கு செயலாளர் சிரம்பரசன், வடக்கு மாநகர தலைவர் சதீஸ்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: