திருப்பூர்,

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கருத்துரிமையைப் பறிக்கும் விதத்தில் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் 10 மையங்களில் கருத்துரிமைப் பாதுகாப்புப் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

செவ்வாயன்று காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை இந்த இயக்கம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.சுப்பிரமணியம், இ.அங்குலட்சுமி மற்றும் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார், சண்முகம் உள்பட கட்சி அணியினர் பங்கேற்று மத்திய மோடி அரசு, மாநில எடப்பாடி பழனிசாமி அரசின் கருத்துரிமைப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி உரையாற்றினர். இந்த பிரச்சார இயக்கம் வீரபாண்டியில் தொடங்கி முருகம்பாளையம், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், மங்கலம், இடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிற்பகல் செட்டிப்பாளையத்தில் தொடங்கி புதூர் பிரிவு, ராக்கியாபாளையம், நல்லூர், விஜயாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

குடிமங்கலம்
இதேபோல் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் குடிமங்கலம் பகுதியில் தொடங்கி சிக்கனூத்து, மூங்கில்தொழுவு, கொசவம்பாளயைம், சலவநாயக்கன்பட்டி, வகைதொழுவு, முகவனூர் பகுதியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் என். சசிகலா தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ஸ்ரீதர், லட்சுமணசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: