ஈரோடு,
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இதுநாள் வரையிலும் சம்பளம் வழங்காததை கண்டித்து ஈரோடு பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தம்பிக்கலையன், என்எப்டிஇ மாவட்ட தலைவர் பாலசுப்ரமணி, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சையத் இத்ரிஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு முன்னாள் மாநில நிர்வாகி ப.மாரிமுத்து போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், என்எப்டிஇ மாவட்டசெயலாளர் என்.பழனிவேலு, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டடத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: