JNU பல்கலைகழத்தில் இடதுசாரி மாணவர் கூட்டணி வெற்றி பற்றி என்ன நினைக்கீறீர்கள் என நிருபர்கள் கேட்க அவர்கள் இந்தியாவின்(waging a war) மீதுபோர்தொடுப்பவர்கள்என
நீர்மலாலா சீதாராம் கூறியுள்ளார். நான் நிர்மலா சீதாராமனுக்கு கூறிக் கொள்வது இது
தான். நீங்களோ உங்களைப்போன்ற மனுதர்ம ஆதிக்க சக்திகளோ தாங்கள்தான் இந்தியா என்று கருதுவீர்களேயானால் உங்கள்மீது நாங்கள் கடுமையாகப் போர் தொடுப்போம். இந்தியாவிலுள்ள 110 முதலாளிகளுக்குத்தான் இந்தநாடு என்று நீங்கள் முடிவுசெய்வீர்களேயானால்  கட்டாயம் உங்கள்மீது நாங்கள் போர்தெடுப்போம். ஒரே மதம் ஒரே
மொழி ஒரேதேசம் என்பதை நீங்கள் அரக்கத் தனமாக அமுல்படுத்த முயற்சிப்பீர்களேயானால்
நிச்சயமாக உங்கள்மீது நாங்கள் போர்தொடுப்போம். சிறுபான்மை மக்களுக் கெதிராக தாழ்த்
தப் பட்ட தலீத் மக்களுக் கெதிராக மெல்லக் கொல்லும் விசமாக நயவஞ்சக நரித்தன வேலை
களில் நீங்கள் ஈடுபடுவீர்களே யானால் உறுதி யாக உங்கள்மீது நாங்கள் போர்தொடுப்போம்.
கருத்துரிமைக் கெதிராக தொடர்ந்து படுகொலைகளும் உங்கள் பாசிச நடவடிக்கை
களும் நீடிக்குமானால் உயிர்உள்ளவரை உங்கள் மீது போர் தொடுத்துக் கொண்டே இருப்போம்.
உலகத்தில் எத்தனையோ சர்வாதிகார சக்திகளின்மீது போர் தொடுத்தவர்கள் நாங்கள். சரித்
திரத்தைப் புரட்டிப் பாருங்கள் ஜார் மன்னனி லிருந்து சர்வாதி ஹிட்லர்வரை நாங்கள் தொடுத்த போர்களால் அவர்களின் மணிமகுடங்கள் மண்ணில் உருண்ட கதைகளைச் சொல்லும்
நீங்கள் எல்லாம் ஆடிமாதத்தில் அடித்த காற்றில் குப்பையிலிருந்து கோபுரத்தில் வந்து ஒட்டிக்
கொண்ட காகிதங்கள்.. எங்கள்போர் எவ்வளவு மகத்தானது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்
நாடறியும் சரித்திர ஏடறியும்.

மதுரைபாலன்

Leave A Reply

%d bloggers like this: