புதுதில்லி :

ஆப்கானிஸ்தான் குடியரசுத்தலைவர் அஸ்ரப் கானி ஒருநாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். இன்று காலை தலைநகர் புதுதில்லிக்கு வருகை புரிந்த அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா உதவி வரும் நிலையில் அதுதொடர்பான பேச்சு வார்த்தையும் நடைபெற உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: