சென்னை:
மதச்சார்பின்மைக்கு அச் சுறுத்தல் விடும் வகையிலும் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகை யிலும் தரக்குறைவாக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்ய வேண்
டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். செந்தில், மாநிலச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பது:
தமிழக அமைச்சர்கள் பலரும் ஜனநாயக உரிமை இருக்கிறது எனக்கூறி எச். ராஜா பேசியது பற்றி சாதாரணமாக கடந்து செல்வ தும், சோபியா போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைக்கத் துடிப்பதும் தமிழகத்தில் மனுநீதியை உயர்த்திப் பிடிக்கும் கேவலமான செயலில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

தமிழக அரசின் இத்தகையச் செயல் என்பது தமிழக மக்களின் ஒற்றுமைக்கு விடுத்துள்ள சவாலே ஆகும். இதை தமிழக மக்கள் உறுதியாக இனம் கண்டு ஒதுக்கித்தள்ளு வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தற்போது சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை எச்.ராஜா தரக்குறைவாக பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சிறப்பியல்பான மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடும் எச். ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக
அரசை வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை முன் வைத்து இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வலுவான முறையில் போராட்டம் நடத்திட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: