விஜய் மல்லையா நாட்டைவிட்டு வெளியேறிவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசில், அவரை கைது செய்ய வேண்டியதில்லை என்று மத்திய குற்றப்புலனாய்வுக்கழகம் (சிபிஐ) குறிப்பிட்டிருந்தது உண்மைதான் என்ற தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. மும்பை காவல்துறையிடம் அளிக்கப்பட்ட அந்த நோட்டீசில் என்ன இருந்தது என்பது குறித்து முதலில் மழுப்பலாக சிபிஐ பதில் கூறியிருந்தது. இந்நிலையில், கைது செய்யத் தேவையில்லை என்று சிபிஐ குறிப்பிட்டிருந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் புலனாய்வு செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

சிபிஐ தொடர்பான துறைக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகிப்பவர் பிரதமர் நரேந்திர மோடிதான். மல்லையா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதில் சிபிஐ நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள இந்தக் கேள்விகள், சந்தேகங்கள் அனைத்தும் நேராக பிரதமர் நரேந்திர மோடியை நோக்கியே நீள்கின்றன. மொகுல் சோக்சியும் லலித் மோடி, நீரவ் மோடிகளும், மல்லையாக்களும் போன்ற பாஜக அரசின் கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகள் எப்படி நாட்டைவிட்டு தப்பிச் சென்றார்கள் என்ற கேள்விக்கு பாஜக ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். உயர்மட்ட அரசியல் தலைமையின் பாதுகாப்பும் ஆசியும் இல்லாமல் இந்த கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகள் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது. வங்கியில் கடன்வாங்கிய ஏழைகள் இப்படி தப்பிச் சென்றுவிட முடியுமா?

Leave a Reply

You must be logged in to post a comment.