சேலம்,
நவ. 13 ஆம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை சேலத்தில் நடத்த ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பின் விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மோசஸ், மாயவன் ஆகியோர் தலைமையில் சேலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கான பிரச்சாரத்தை செப்.24 முதல் 28 ஆம் தேதிவரை நடத்துவது; மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டங்களை அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நடத்துவது; நவம்பர் 13 ஆம் தேதி சேலத்தில் ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் உதவிக் கல்வி அலுவலரை உடனடியாக மீண்டும் பணியமர்த்த வேண்டும். மாணவர்களுக்கு உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்கள் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்துவதில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் நீட் போன்ற தனித்தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளை வார விடுமுறை நாட்களில் நடத்துவதற்கு பதிலாக பள்ளி நாட்களிலேயே நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.